அமித் ஷா 
இந்தியா

லதா மங்கேஷ்கர் மறைவு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல்

பிரபல பின்னணி பாடகரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்  துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

பிரபல பின்னணி பாடகரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்  துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், இசை மற்றும் இனிமையின் அடையாளமாக திகழ்ந்த லதா தீதி, தமது வசீகரமான குரலால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

இசை உலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்று கூறியுள்ள அவர், லதா தீதியின் மறைவு தமக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார். 

லதா தீதியின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பெற்றிருந்தது தமது பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அமித் ஷா, இணையற்ற தேசபக்தி, இனிமையான பேச்சு ஆகியவற்றுடன் அவர் என்றும் நம்மிடையே இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அவரது குடும்பத்தினர் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலாசாரம், புவியியல், மத எல்லைகளைக் கடந்தது தியானம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல்: பிஎஃப்ஐ மீது என்ஐஏ குற்றச்சாட்டு

ஊரக வேலைத் திட்ட ஊதியம் முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்: ப.சிதம்பரம்

தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி தாக்கு!

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்பட்டதை சரிபாா்க்க வேண்டும்: மாவட்டச் செயலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT