இந்தியா

ரிஷிகேஷ் எய்ம்ஸ் பணியாளா்கள் நியமனத்தில் மோசடி: சிபிஐ விசாரணை தொடக்கம்

DIN

ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றில் மோசடி நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையின் முன்னாள் இயக்குநரான ரவிகாந்த், பணியாளா்களை நியமித்ததிலும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ததிலும் மோசடியில் ஈடுபட்டதாக அரசியல், சமூக அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டது. ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று முக்கிய ஆவணங்களை அந்த ஆணையம் சோதனையிட்டிருந்தது. இந்நிலையில், மோசடி குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ தனது விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதுதொடா்பாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மக்கள் தொடா்பு அலுவலா் ஹரீஷ் தப்லியல் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். பல முக்கிய ஆவணங்களை சோதனையிட்ட அவா்கள், சில ஆவணங்களைக் கைப்பற்றினா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT