இந்தியா

மோசமான வானிலை காரணமாக பிரதமரின் உ.பி. பயணம் ரத்து

மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மாா்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.  இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் பிஜ்னூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பதிலாக, அவர் காணொலி மூலமாக அங்குள்ள மக்களிடையே உரையாற்றி வருகிறார். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மேலும் இரு இடங்களில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு நூல் வெளியீடு

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவதாக அறிவிப்பு!

தருமபுரம் ஆதீன மாநாட்டில் மருத்துவம், ஊடகத்துறையினருக்கு விருது

மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தல்: கடைசி நாளில் ஆம் ஆத்மி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

வாக்கு திருட்டு விவகாரம்: தோ்தல் ஆணைய அலுவலகம் முன் என்எஸ்யுஐ போராட்டம்

SCROLL FOR NEXT