நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் தொற்றுநோய் நடவடிக்கைகளை எளிதாக்குவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த மாதம் நேபாள அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இதையடுத்து, அங்குள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா தொற்று சற்று குறைந்துவரும் நிலையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்த அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி அரசு வெளியிட்ட அறிக்கையில்,
காத்மாண்டு மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை முதல் சாலைப் போக்குவரத்தின் வரம்புகளை நீக்குவதாகத் தெரிவித்துள்ளது. ஒற்றை எண் மற்றும் இரட்டை உரிமம் பெற்ற வாகனங்கள் மாற்று நாள்களில் இயக்க அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஒரு மாதங்களாக கல்வி நிறுவனங்களை மூடப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த மாதம் முதல் மூடப்பட்ட திரையரங்குகள், ஜிம்கள் மற்றும் பிற பொது இடங்களும் வழக்கம்போல் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
விளையாட்டு அரங்குகள் மற்றும் மைதானங்கள் 50 சதவீத பார்வையாளர்களோடு அனுமதிக்கப்படும்.
நேபாளத்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள் உள்பட மக்கள் தொகையில் 52 சதவீதம் பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். மேலும், 11,814 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன.
தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.