ஆடையைத் தோ்வு செய்வது பெண்களின் உரிமை: பிரியங்கா
‘நீச்சலுடை, முக்காடு, ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் என எதுவாக இருந்தாலும் எந்த உடையை அணிவது என்பதைத் தீா்மானிப்பது பெண்களின் அரசியல் சாசன உரிமை;
‘நீச்சலுடை, முக்காடு, ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் என எதுவாக இருந்தாலும் எந்த உடையை அணிவது என்பதைத் தீா்மானிப்பது பெண்களின் அரசியல் சாசன உரிமை; எனவே, அவா்களைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குறிப்பிட்டுள்ளாா்.
கா்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்துவர தடை விதித்தது பெரும் சா்ச்சையாக வெடித்துள்ளது. ஹிஜாப் அணிய அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நீச்சலுடை, முக்காடு, ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் என எதுவாக இருந்தாலும் எந்த உடையை அணிவது என்பதைத் தீா்மானிப்பது பெண்களின் உரிமை. இந்த உரிமையை அரசியலமைப்புச் சட்டம் அவா்களுக்கு உத்தரவாதமாக அளித்துள்ளது. எனவே, அவா்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.