முகப்பு
இந்தியா

கேரளம்: ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக வழங்கிய தொழிலதிபர்

கேரளத்தில் ஏ.கே ஷாஜி என்கிற தொழிலதிபர்  தன் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

இந்தியா

கேரளம்: ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக வழங்கிய தொழிலதிபர்

கேரளத்தில் ஏ.கே ஷாஜி என்கிற தொழிலதிபர்  தன் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

கேரளத்தில் ஏ.கே ஷாஜி என்கிற தொழிலதிபர்  தன் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஏகே ஷாஜி, இவருடைய மார்கெட்டிங் நிறுவனமான ‘மைஜி’-யில் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து  வரும் சி.ஆர் அனிஷ் என்பவருக்கு ஷாஜி மெர்சிடஸ் பென்ஸ் எஸ்யுவி காரை பரிசாக வழங்கியிருக்கிறார். 

பரிசு வழங்கிய விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷாஜி ‘ அன்புள்ள அனில், கடந்த 22 ஆண்டுகளாக என் பலமான தூணாக இருக்கிறாய். உன்னுடைய புதிய துணையை விரும்புவாய் என நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஷாஜி தன் ஊழியர்கள் 6 பேருக்கு கார்களைப் பரிசாக வழங்கியிருந்தார்.

2018-ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தன் ஊழியர்கள் 600 பேருக்கு தீபாவளிப் பரிசாக கார்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →