ஒமைக்ரான் பரவலுக்குப் பின் 5 லட்சம் பேர் பலி
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பிறகு, கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பிறகு, கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற கரோனா தொற்றுகளை விட, பாதிப்புக் குறைவாக இருப்பதாகக் கருதப்படும் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு உலகளவில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது.
இதையும் படிக்க.. அவிநாசியில் விஏஓ லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலால் பரபரப்பு
Advertisement
இந்த நிலையில், ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பிறகு, உலகளவில் 5 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
அதுபோல, ஒமைக்ரான் பரவத் தொடங்கிய பிறகு, உலகளவில் 13 கோடிப் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதகாவும், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இணை நோய் இருந்தவர்களுக்குத்தான் ஒமைக்ரான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.