குஜராத்: பாகிஸ்தான் மீனவர்கள் 3 பேர் கைது, 11 படகுகள் பறிமுதல்
குஜராத்தின் பூஜ் பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவரது படகுகளையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத்தின் பூஜ் பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவரது படகுகளையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பூஜ் பகுதியில் உள்ள ஹராமி நல்லா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு, 11 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஹராமி நல்லாவில் பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்களின் ஊடுருவல் இருப்பதை வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குஜராத் எல்லைப் பகுதி, பாதுகாப்புப் படையினர் உடனடியாக 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.