இந்தியா

நாட்டில் புதிதாக 58,077 பேருக்கு கரோனா; 657 பேர் பலி

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,077 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 657 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிட்டுள்ள தகவல் படி,

நாட்டில் புதிதாக 58,077 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 657 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,07,177 -ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக நேற்று ஒரேநாளில் 1,50,407 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 6,97,802 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1,71,79,51,432 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 3.89 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1.64 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 74,61,96,071 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,11,321 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT