‘பாஜக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்’: உ.பி.யில் மோடி
யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள் என கான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசினார்.
இந்தியா‘பாஜக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்’: உ.பி.யில் மோடி
யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள் என கான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசினார்.
யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள் என கான்பூர் தேஹாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசினார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.10ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கான்பூர் தேஹாதில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
தெருக்களில் சில ரெளடிகளால், படிக்கச் சென்ற இஸ்லாமிய பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். எங்களின் அரசு பொறுப்பேற்ற பிறகு ரெளடிகள் ஒழிக்கப்பட்டனர். தற்போது பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.
பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக உணர்வதால், தற்போது மாநிலத்தில் அதிகளவிலான பெண்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளை மாற்றினால், உத்தரப் பிரதேச மக்களுக்கு எவ்வாறு சமாஜ்வாதியால் சேவை செய்ய முடியும்.
2017ஆம் ஆண்டுக்கு முன்பு, உ.பி.யில் ஒவ்வொரு நாளும் ரேஷன் மோசடிகள் நடைபெற்றது. பல லட்சம் போலி ரேஷன் கார்டுகளை தயாரித்துள்ளனர். தற்போதைய அரசு, இந்த போலி ரேஷன் கார்டுகளை முடிவுக்கு கொண்டு வந்தது.
இன்று, கோடிக்கணக்கான பொதுமக்கள் இலவசமாக ரேஷன் பெறுகின்றனர். என் ஏழை சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் அடுப்புகள் ஒருபோதும் அணைக்கப்படாது எனத் தெரிவித்தார்.