முகப்பு
இந்தியா

உ.பி.யில் காலை 11 மணி நிலவரப்படி 23.03 சதவீத வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில், திங்கள்கிழமை காலை 11 மணி நிலவரப்படி 23.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில், திங்கள்கிழமை காலை 11 மணி நிலவரப்படி 23.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7:00 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசதத்தில் 23.03 சதவீதமாக பதிவாகியுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 9.45 சதவீத வாக்குகள் பாதிவானது.

அதைத்தொடர்ந்து, சஹாரன்பூர், பிஜ்னோர், அம்ரோஹா, சம்பல், மொராதாபாத், ராம்பூர், பரேலி, புடான் மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய மொத்தம் 55 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

மொராதாபாத்தில் அதிகபட்சமாக 25.84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன, அதைத் தொடர்ந்து சஹாரன்பூர் (25.16 சதவீதம்) மற்றும் பிஜ்னோர் (24.51 சதவீதம்), அம்ரோஹாவில் 22.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, அதேசமயம் சம்பாலில் 22.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புடானில் 21.95 சதவீத வாக்குகளும், ராம்பூரில் 21.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. ஷாஜஹான்பூரில் 21.55 சதவீத வாக்குகளும், பரேலியில் 20.68 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
 

முழு கட்டுரையைப் படிக்க →