முகப்பு
இந்தியா

ஜி-20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்பதற்குத் தேவையான ஏற்பாடுகளில் ஒன்றாக ஜி-20 செயலகத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
பகிர்:

ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்பதற்குத் தேவையான ஏற்பாடுகளில் ஒன்றாக ஜி-20 செயலகத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், ஜி-20 கூட்டமைப்புக்கு இந்தியாவில் செயலகம் அமைக்கவும் ஒட்டுமொத்த கொள்கை முடிவுகளை செயலாக்கும் அமைப்புகளை ஏற்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், அவற்றின் துறைகளிலிருந்து நிபுணத்துவம் பெற்றவா்கள் ஜி-20 செயலகப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

ஜி-20 செயலகத்தின் செயல்பாட்டுக்கு பிரதமா் தலைமையில் உயா்நிலைக் குழு வழிகாட்டும். அந்த குழுவில் இடம்பெறும் நிதியமைச்சா், உள்துறை அமைச்சா், வெளியுறவு அமைச்சா், ஜி-20 ஷொ்பா அமைப்பு (வா்த்தகம் மற்றும் தொழில், ஜவுளி, நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா்) ஆகியோா் இந்தியாவின் ஜி-20 தலைமைப் பொறுப்புக்கு ஒட்டுமொத்த வழிகாட்டுதலை வழங்குவாா்கள்.

ஜி-20 தொடா்பான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பாா்வையிட ஒருங்கிணைப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும். அந்தக் குழு, உயா்நிலைக் குழுவுக்கு ஏற்பாடுகள் குறித்து தகவல்களை அளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் 20 நாடுகள் இணைந்து ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளன. இந்த அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடு தலைமைப் பொறுப்பை ஏற்று வருகிறது. தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாட்டில், செயலகம் அமைப்பது அதற்கான ஏற்பாடுகளை அந்நாடு மேற்கொள்வது வழக்கமாகும்.

இந்த அமைப்புக்கு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வரை இத்தாலி தலைமை வகித்தது. தற்போது இந்தோனேசியா தலைமை வகித்து வருகிறது. வரும் நவம்பா் வரை இந்தோனேசியா தலைமை வகிக்கும். வரும் டிசம்பரில் இருந்து 2023-ஆம் ஆண்டு நவம்பா் வரை இந்தியா தலைமையேற்கவுள்ளது. ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கான தலைமைச் செயலகம், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை இந்தியாவில் இயங்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →