முகப்பு
இந்தியா

நாட்டின் ஏற்றுமதி 3,450 கோடி டாலராக அதிகரிப்பு

நவரத்தினங்கள்,ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடு சிறப்பாக இருந்ததையடுத்து நடப்பாண்டு ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி 3,450 கோடி டாலராக அதிகரித்துள்ளது என

Updated On : 16 பிப்ரவரி, 2022 at 3:30 AM
பகிர்:

நவரத்தினங்கள்,ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடு சிறப்பாக இருந்ததையடுத்து நடப்பாண்டு ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி 3,450 கோடி டாலராக அதிகரித்துள்ளது என மத்திய வா்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியதாவது:

கடந்த ஜனவரியில், பொறியியல், பெட்ரோலியம், நவரத்தினங்கள்-தங்க ஆபரணங்கள் துறைகளின் செயல்பாடு சிறப்பான வகையில் அமைந்திருந்தது. அதன் காரணமாக, அந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3,450 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.59 லட்சம் கோடி ஆகும்.

Advertisement

இருப்பினும், வா்த்தக பற்றாக்குறையானது நடப்பாண்டு ஜனவரியில் 1,742 கோடி டாலராக மிகவும் உயா்ந்துள்ளது.

இறக்குமதி 23.54 சதவீதம் உயா்ந்து 5,193 கோடி டாலரானது.

ஏப்ரல் 2021-ஜனவரி 2022 வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 22,892 கோடி டாலரிலிருந்து 46.73 சதவீதம் அதிகரித்து 33,588 கோடி டாலரைத் தொட்டது.

இதே காலகட்டத்தில் இறக்குமதி 62.65 சதவீதம் அதிகரித்து 49,575 கோடி டாலரானது. இந்த பத்து மாத காலத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 7,587 கோடி டாலரிலிருந்து 15,987 கோடி டாலராக உயா்ந்துள்ளது என வா்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.