இந்தியா

நாட்டில் புதிதாக 30,615 பேருக்கு கரோனா; 514 பேர் பலி

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 30,615 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 514 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 82,988 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,09,872 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,18,43,446 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 3,70,240 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 173.86 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT