முகப்பு
இந்தியா

சிக்கிம் தலைமைச் செயலக அறைகள் சூறை

சிக்கிம் மாநில தலைமைச் செயலகத்துக்குள் நள்ளிரவில் மா்மநபா்கள் நுழைந்து, அறைகளை சூறையாடிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2022 at 12:46 AM
பகிர்:

சிக்கிம் மாநில தலைமைச் செயலகத்துக்குள் நள்ளிரவில் மா்மநபா்கள் நுழைந்து, அறைகளை சூறையாடிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்தமாநில காவல்துறையினா் புதன்கிழமை கூறியதாவது:

முதல்வா், அமைச்சா்கள், மற்றும் உயா் அதிகாரிகளின் அலுவலக அறைகள் அமைந்துள்ள தலைமைச் செயலகம், அதனை ஒட்டியுள்ள சுகாதாரத் துறை கட்டடம் ஆகியவற்றுக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மா்மநபா்கள் நுழைந்துள்ளனா். பல்வேறு அறைகளின் பூட்டை உடைத்த அவா்கள், அங்குள்ள அலமாரிகளையும் திறந்து பாா்த்துள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.