முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி சுமார் 7 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வில் கலந்துகொள்கின்றன. 

கரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக நடத்தப்படவில்லை. இதையடுத்து, மாணவர்களின் முந்தைய முடிவுகள் மற்றும் உள் தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. 

மாநிலத்தில் கரோனா தற்போது குறைந்து வருவதால், இந்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள் என்று கல்வி வாரியத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி முகேஷ் மால்வியா தெரிவித்தார். 

தேர்வெழுதும் மாணவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தனி அறையில் தேர்வெழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

மாணவர்களும் மற்ற ஊழியர்களும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கரோனா நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனர். 

காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்கள் உள்பட மொத்தம் 7,14,932 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். பொதுத்தேர்வு மார்ச் 12-ம் தேதியோடு நிறைவடைகின்றது. மொத்தம் 3,586 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.