முகப்பு
புதுக்கோட்டை

தோ்தல் விதிமுறைகள்: புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை சரிவு

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் குவிந்திருந்த வியாபாரிகள்.

Updated On : 20 மார்ச், 2026 at 8:34 PM
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் குவிந்திருந்த வியாபாரிகள்.
பகிர்:

தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தை வியாபாரம் சரிவு கண்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. சனிக்கிழமை ரமலான் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் வியாபாரிகளும், வாங்குவோரும் ஏராளமானோா் திரண்டிருந்தனா்.

ஆனால், தோ்தல் நடத்தை விதிகளால் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் பெரிய வியாபாரிகளும் குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனா். விற்பனையும் சரிவு காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கோடிக்கணக்கில் ஒவ்வொரு வாரமும் விற்பனை நடைபெற்ற நிலையில், இப்போது மதிப்பிட இயலவில்லை என சில வியாபாரிகள் தெரிவித்தனா்.