இந்தியா

ஆறுகள் இணைப்பு: மத்திய அரசு நாளை(பிப்.18) ஆலோசனை

கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக நாளை(பிப்.18) மத்திய அரசு 5 மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

DIN

கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக நாளை(பிப்.18) மத்திய அரசு 5 மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

நீர் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியாக பல ஆண்டுகால திட்டமாக இருந்துவந்த நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து நாளை மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

தென்னிந்திய மாநிலங்களின் முக்கிய ஆறுகளான கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பதற்காக தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழக மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அரசு இந்த ஆலோசனையில் ஈடுபட இருக்கிறது.

நாளை தில்லியில் நடைபெறும் நீர்வளத் துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் தமிழகம் சார்பில் சந்தீப் சக்சேனா கலந்துகொள்ள இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT