இந்தியா

சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது

DIN

தாவூத் இப்ராஹிம் தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில் மகாராஷ்டிர சிறுபான்மை விவகார அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான நவாப் மாலிகை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். 

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறையினர் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிகை இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தது. 

62 வயதான நவாப் மாலிகை கைது செய்த பின்பு மருத்துவ பரிசோதனைக்காக அமலாக்கத்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. பின்னர்,  இன்று காலை 8 மணிக்கு தெற்கு மும்பையின் பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவலில் வைக்கப்பட்டார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT