சசி தரூர் (கோப்புப் படம்) 
இந்தியா

'தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எந்தப் பிரச்னைகளுக்கும் முடிவில்லை': சசிதரூர்

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எந்தப் பிரச்னைகளும் தீர்த்துவைக்கப்பட்டதில்லை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

DIN

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எந்தப் பிரச்னைகளும் தீர்த்துவைக்கப்பட்டதில்லை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்கு, சசிதரூர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். 

இரு நாடுகளுக்கு இடையிலுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்க பிரதமர் இம்ரான் கான் நேற்று (பிப்.22) விருப்பம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இது குறித்து சசி தரூர் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் இதுவரை எந்தப் பிரச்னைகளும் தீர்த்துவைக்கப்பட்டதில்லை. மாறாக நிலைமையை மேலும் மோசமாகவே மாற்றியுள்ளது. டிஆர்பி புள்ளி அதிகரிக்கிறதென்றால், சில நெறியாளர்கள் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி விடுவதிலும் மகிழ்வார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT