முகப்பு
இந்தியா

'ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்' - பிரதமர் மோடி

ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 59 தொகுதிகளுக்கான 4 ஆம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று நான்காவது சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் தங்களின் பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகின்றது.

காங்கிரஸின் கோட்டையாக அறியப்படும் ரே பரேலி தொகுதி, லக்கிம்பூர் கேரி பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 59 தொகுதிகளில் உள்ள 24,643 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 624 வேட்பாளா்கள் போட்டியிடும் இத்தொகுதிகளில் 2.13 கோடி வாக்காளர்கள் வாக்கு செலுத்துகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →