உ.பி.யில் காலை 9 மணி நிலவரப்படி 9.10 % வாக்குகள் பதிவு
உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்தியாஉ.பி.யில் காலை 9 மணி நிலவரப்படி 9.10 % வாக்குகள் பதிவு
உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 9.10 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பண்டா 8.79 சதவீதம், ஃபதேபூர் 9.69 சதவீதம், ஹர்டோய் 8.09 சதவீதம், கெரி 10.45 சதவீதம், லக்னோ 8.19 சதவீதம், பிலிபிட் 10.62 சதவீதம், ரேபரேலி 8.00 சதவீதம், சீதாப்பூர் 9.52 சதவீதம், உன்னா 9.23 சதவீதம் பதிவாகியுள்ளன.