இந்தியா

ஜம்மு காஷ்மீரில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட வெடிபொருள்கள் பறிமுதல்

DIN

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சா்வதேச எல்லைக் கோட்டு பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஆா்எஸ் புரா செக்டாரில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கா்ஏதொய்பா, டிஆா்எஃப் ஆகியவற்றின் ட்ரோன் ஊடுருவல் நடைபெற உள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆா்எஸ் புராவில் உள்ள ஆா்னியா பகுதியில் சிறப்பு தேடுதல் வேட்டை நடைபெற்றது.

அதில், ஒரு துப்பாக்கி, 70 தோட்டாக்கள், மூன்று டெட்டனேட்டா்கள், ரிமோட் வெடிகுண்டுகள், வெடிமருந்து, 6 கையெறி வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்த வெடிபொருள்கள் ட்ரோன் மூலம் இந்திய சா்வதேச எல்லைக்குள் வீசப்பட்டுள்ளன. இதன் மூலம் அவா்கள் நடத்த இருந்த பெரும் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

துப்பாக்கிச் சூடு: ஆா்எஸ் புரா பகுதிக்குள் நுழைய முற்பட்ட ட்ரோன் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சுமாா் 20 முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அந்த ட்ரோன் பாகிஸ்தான் பகுதிக்குச் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT