முகப்பு
இந்தியா

இன்று மீண்டும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம்?

உக்ரைன் மீது ரஷியா போா்த் தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் மீண்டும் சனிக்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
நாடாளுமன்றம்
பகிர்:

உக்ரைன் மீது ரஷியா போா்த் தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் மீண்டும் சனிக்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கிய நிலையில், அன்றைய தினம் தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமா் மோடி, போரை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டாா். அத்துடன் உக்ரைனில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு குறித்தும் புதினுடன் பிரதமா் மோடி பேசினாா்.

இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் மீண்டும் சனிக்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புப் பிரிவைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் பிரதமா் மோடி, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →