உத்தரகண்ட்டைச் சேர்ந்த 188 பேர் உக்ரைனில் சிக்கித் தவிப்பு
உத்தரகண்ட்டைச் சேர்ந்த 188 பேர் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக உத்தரகண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.
உத்தரகண்ட்டைச் சேர்ந்த 188 பேர் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக உத்தரகண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கத் தேவையான ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் உத்தரகண்ட்டில் சுமார் 188 பேர் சிக்கித் தவிப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைப் பத்திரமாக மீட்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
உத்தரகண்ட்டின் பொது உதவி எண் "112" என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் சிக்சித் தவிக்கும் மக்களைப் பாதுகாப்பாக இந்தியா அழைத்துவர அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது. மேலும், அதிக விமானங்கள் இயக்கப்பட உள்ளன.