உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள் 
இந்தியா

உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணிகைளை நேரில் கண்காணிக்கும் வகையில் 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

PTI


புது தில்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணிகளை நேரில் கண்காணிக்கும் வகையில் 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

போர் தீவிரமடைந்திருக்கும் உக்ரைனில் இன்னும் ஏராளமான இந்தியர்களும், மாணவர்களும் சிக்கியிருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், உக்ரைனின் எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு நான்கு மத்திய அமைச்சர்கள் சென்று, இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகளை நேரடியாக பார்வையிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சிறப்புத் தூதுவர்களாக, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் புரி, ஜோதிராதித்திய  சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர், உக்ரைனின் எல்லை நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

ருமேனியாவுக்கு சிந்தியாவும், ஸ்லோவாகியாவுக்கு ரிஜிஜுவும், ஹங்கேரிக்கு புரியும், போலந்துக்கு வி.கே. சிங்கும் செல்லவிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT