தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளுக்கு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீனா பன்சால் கிருஷ்ணா, தினேஷ் குமார் சர்மா, அனூப் குமார் மெந்திரட்டா மற்றும் சுதிர் குமார் ஜெயின் ஆகிய நால்வரும் நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
சுதிர் குமார் ஜெயின், முன்னதாக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றினார். நீனா பன்சால் கிருஷ்ணா சாகேத் (தென் கிழக்கு) மாவட்ட நீதிமன்றத்தின் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக இருந்தார்.
தில்லி அரசாங்கத்தில் சட்டத்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றிய அனூப் குமார் மெந்திரட்டா தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தினேஷ் குமார் சர்மா புதுதில்லி மாவட்ட நீதிமன்றத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.