முகப்பு
இந்தியா

முஸ்லிம் பெண்களை ஏலம் அறிவித்த செயலி முடக்கம்: மத்திய அமைச்சா்

சமூக ஊடகங்களில் பரிச்சயமான 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களை ஏலம் விடுவதாக அறிவித்த செயலி முடக்கப்பட்டுவிட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
பகிர்:

சமூக ஊடகங்களில் பரிச்சயமான 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களை ஏலம் விடுவதாக அறிவித்த செயலி முடக்கப்பட்டுவிட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் பெண் பத்திரிகையாளா் உள்ளிட்ட முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் ‘புல்லிபாய்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவா்கள் ஏல விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவைச் சோ்ந்த ‘கிட்ஹப்’ என்ற நிறுவனம், அந்தச் செயலிக்கு சேவை வழங்கி வந்தது.

இந்நிலையில், ‘புல்லிபாய்’ செயலி குறித்து தில்லியிலும் உத்தர பிரதேசத்திலும் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.

இதில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல் துறைக்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதையடுத்து, அந்தச் செயலியை கிட்ஹப் நிறுவனம் முடக்கி அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘புல்லிபாய் செயலியை முடக்கியதை கிட்ஹப் நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

இணையவழி குற்றங்களைக் கண்காணிக்கும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கைக் குழுவும், காவல் துறையும் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன’ என்றாா்.

கடந்த ஆண்டு ஜுலையில் ‘சல்லிபாய்’ என்ற செயலியில் முஸ்லிம் பெண்களை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாகப் புகாா்கள் எழுந்ததும் அந்த செயலியையும், வலைதளப்பக்கத்தையும் கிட்ஹப் நிறுவனம் முடக்கியது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →