இந்தியா

15 நாள்களுக்குள் சாலைகளை சீரமையுங்கள்: கர்நாடக முதல்வர்

DIN


பெங்களூரு: வரும் 15 நாள்களுக்குள் பெங்களூருவின் சாலைகள் அனைத்தையும் குண்டும் குழியுமற்ற சாலைகளாக மாற்றி சீரமைக்குமாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஒப்பந்த உறுதி திட்டத்தின் கீழ் தற்போது நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு மக்களின் பிரதிநிதிகளிடம் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசனை நடத்திய முதல்வர், மழைநீர் வடிகால்வாய் பணிகளை மிகவும் தரத்துடன் மேற்கொள்ளுமாறும், அதிக நெரிசல் கொண்ட சாலைகளை, குறுகிய கால ஒப்பந்தத் திட்டங்கள் மூலம் உடனடியாக நிறைவேற்றவும், பெங்களூரு நகரின் ஒட்டுமொத்த 751.41 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலைகளை அடுத்த 15 நாள்களுக்குள் செப்பனிட்டு சீரமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT