இந்தியா

குடும்பத்தலைவிகள், மாணவிகளுக்கு உதவித்தொகை: பஞ்சாபில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

DIN

பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகள், மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

நடப்பு ஆண்டில் ஏப்ரல் - மே மாதங்களில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதனிடையே 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

அந்தவகையில் பஞ்சாபில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து, 

வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடும்பத்த தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் குடும்பத்தை சமாளிக்க வருடத்திற்கு 8 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். 

மாணவிகள் 5 ஆம் வகுப்பு முடித்தால் ரூ. 5,000, 10 ஆம் வகுப்பு முடிக்கும்போது ரூ. 15,000, 12 ஆம் வகுப்பு முடிக்கும்போது ரூ. 20,000 என உதவித்தொகை வழங்கப்படும். மேலும் மாணவிகளின் உயர்கல்விக்கு பயன்படும் வகைகளில் கணினிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT