இந்தியா

மூன்று நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் (விடியோ)

ANI


புரி: டிசம்பர் 31ஆம் தேதி முதல் கடந்த மூன்று நாள்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற ஸ்ரீஜெகந்நாதர் கோயில் இன்று காலை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, புத்தாண்டு நாளில், அதிக பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீஜெகந்நாதர் கோயில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் மூடப்பட்டிருந்தது.

ஆனால், கோயிலில் அன்றாடம் நடைபெற வேண்டிய பூஜைகள், பூசாரிகள் மற்றும் சேவார்த்திகள் மூலமாக தொடர்ந்து மூன்று நாள்களும் நடைபெற்று வந்தது. அதுபோல, கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் வெகுச் சிறப்பாக செய்யப்பட்டு, இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT