இந்தியா

பாஜகவில் இணைந்து 6 நாள்களில் மீண்டும் காங்கிரஸுக்கே திரும்பிய எம்.எல்.ஏ.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த எம்.எல்.ஏ. ஒருவர் 6 நாள்களில் மீண்டும் பழைய கட்சிக்கே திரும்பியுள்ளார்.

DIN

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த எம்.எல்.ஏ. ஒருவர் 6 நாள்களில் மீண்டும் பழைய கட்சிக்கே திரும்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வீந்தர் சிங் லத்தி, ஃபதேஜாங் சிங் பாஜ்வா ஆகியோர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

இதையடுத்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் செளத்ரி ஆகியோருடன் நேற்று இரவு பல்வீந்தர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியில் மீண்டும் பல்வீந்தர் திங்கள்கிழமை காலை இணைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி நெருங்குவதால் ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

14 குழந்தைகள் இறப்பு: ம.பி.யில் மருத்துவா் கைது! இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு!

ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு குழாய் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

‘கோல்ட்ரிஃப்’ மருந்து உற்பத்தி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

SCROLL FOR NEXT