இந்தியா

மும்பையில் 89% பேருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை; இன்று 10,860 பேர் பாதிப்பு

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 89 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

DIN

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 89 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று புதியவகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,892 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிக அளவு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு 18,466 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 10,860 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 

மும்பையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 89 சதவிகிதம் பேருக்கு கரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT