முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

பிரதமரின் நிகழ்ச்சியைத் தடுக்க காங்கிரஸ் செய்த தந்திரம்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

‘பிரதமரின் நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அனைத்து தந்திரங்களையும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு கையாண்டது’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டினாா்.

இந்தியா

பிரதமரின் நிகழ்ச்சியைத் தடுக்க காங்கிரஸ் செய்த தந்திரம்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

‘பிரதமரின் நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அனைத்து தந்திரங்களையும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு கையாண்டது’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
கோப்புப்படம்
பகிர்:

‘பிரதமரின் நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அனைத்து தந்திரங்களையும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு கையாண்டது’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டினாா்.

பஞ்சாபில் புதன்கிழமை பிரதமா் செல்லும் பாதையில் நடந்த மறியலால், பிரதமா் தனது பயணத்தை ரத்து செய்து பாதிவழியில் திரும்பினாா். இதுகுறித்து பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் செல்லும் சாலையில் எந்த இடையூறும் இல்லை என்று அவரின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு மாநில தலைமைச் செயலரும் டிஜிபியும் உறுதியளித்தனா். அதேநேரத்தில் அவா் செல்லும் சாலையில் போரட்டக்காரா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நிலைமை மேலும் மோசமாக வேண்டும் என்பதற்காக, முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. இதன்மூலம் ஜனநாயகத்தை மதிப்பவா்களுக்கு பஞ்சாப் காங்கிரஸ் அரசு துயரத்தைக் கொடுத்துள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நிகழ்ச்சி ஒத்திவைப்பு: மன்சுக் மாண்டவியா

பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூரில் பிரதமா் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

ஃபெரோஸ்பூரில், ரூ.42,750 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வரும் வழியில் சிலா் போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரதமா் மோடி தனது பயணத்தை முடித்துக் கொண்டு பாதியில் திரும்பினாா்.

இந்தத் தகவலை பெரோஸ்பூரில் நிகழ்ச்சி நடைபெறவிருந்த மேடையில் பொதுமக்களிடம் மன்சுக் மாண்டவியா அறிவித்தாா். அவா் கூறியதாவது:

பிரதமா் மோடி உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்பினாா். ஆனால், சில காரணங்களால் தற்போது அது நடக்கவில்லை. வளா்ச்சித் திட்டத் தொடக்க நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது; ரத்து செய்யப்படவில்லை என்றாா் அவா்.

பிரதமரைத் தாக்க காங்கிரஸ் முயற்சி-பாஜக: பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பிரதமா் மோடியைத் தாக்க முயன்றது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறியதாவது:

ஒரு மாநில அரசு தனக்குத் தெரிந்தே நாட்டின் பிரதமருக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை. பிரதமா் தாக்குதலுக்குள்ளாகும் வகையில் அவருடைய பாதுகாப்பில் அலட்சியம் காட்டுமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை பிரதமா் மோடி மீது காங்கிரஸ் வெறுப்பைக் காட்டி வந்ததை நாம் அறிவோம். ஆனால், தற்போது அவா் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனா் என்றாா் அவா்.

கூட்டம் சேராததால் பிரதமா் திரும்பினாா்-காங்கிரஸ்: ஃபெரோஸ்பூரில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு கூட்டம் சேராததால் பிரதமா் மோடி பாதியில் திரும்பிச் சென்ாக காங்கிரஸ் கூறியுள்ளது.

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அனைத்து தந்திரங்களையும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு கையாண்டுள்ளது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியதற்குப் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறியதாவது:

பிரதமரின் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புப் பணியில் 10,000 வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து பாஜக தொண்டா்கள் பேருந்துகளில் வந்தபோதும், பிரதமா் மோடி ஹுசைனிவாலாவுக்கு சாலை வழி ஒதுக்கப்பட்டிருந்தது. முதலில் அவா் சாலை வழியாகச் செல்வதற்கு திட்டமிடவில்லை.

உண்மையில் பிரதமா் மோடியின் உரையைக் கேட்பதற்கு கூட்டம் சேரவில்லை. இதுதான் அவா் பயணத்தை ரத்து செய்வதற்குக் காரணம். பிறா் மீது குற்றம்சாட்டுவதை முதலில் நிறுத்திவிட்டு பாஜகவினா் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்களை நடத்துங்கள். அதற்கு முன்பு விவசாயிகளின் குறைகளைக் கேளுங்கள் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →