நாட்டில் மேலும் 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையின் கிளைகளை நிறுவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை நாட்டின் 12 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் தில்லியில் உள்ளது. இந்நிலையில் மேலும் 6 இடங்களில் அம்முகமையின் கிளை அலுவலகங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா: கோவாவில் குறைந்த விடுதிகள் முன்பதிவு
இதற்கான பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய நிலையில் இதற்கான ஒப்புதலை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி அகமதாபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், போபால், புவனேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க | ‘ஆளுநர் பதவி விலக வேண்டும்’: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
இந்த புதிய கிளை அலுவலகங்களில் மொத்தம் 435 பணியிடங்கள் அமைக்கப்படும் எனவும் சராசரியாக ஒவ்வொரு கிளை அலுவலகத்திற்கும் 72 அலுவலர்களும் நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 50 அலுவலர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.