இந்தியா

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்க்கு கரோனா

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பரவல் (ஒமைக்ரான்) அதிகரித்து வரும் சூழ்நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் முழுவதுமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

நேற்று(ஜன.5) தில்லியில் நடைபெற்ற மத்திய ஆயுத போலீஸ் படை விழாவில் அமைச்சர் கலந்துகொண்டு படையினருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் வணிகா் காயம்

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் தீ விபத்து

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

கல்குவாரி நீரில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

SCROLL FOR NEXT