அட்டாரி-வாகா எல்லை நிகழ்ச்சி: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
அட்டாரி - வாகா எல்லையில் நடைபெறும் தினசரி கொடியிறக்கும் நிகழ்விற்கு பொதுமக்களுக்கு தடை விதிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
அட்டாரி - வாகா எல்லையில் நடைபெறும் தினசரி கொடியிறக்கும் நிகழ்விற்கு பொதுமக்களுக்கு தடை விதிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்புப் படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி தினசரி நிகழ்விற்கு பொதுமக்கள் பங்கேற்க இன்று முதல் அனுமதி இல்லை என எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.