இந்தியா

தெலங்கானா: சிறையிலிருந்து பாஜக தலைவர் விடுதலை

DIN

தெலங்கானாவில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற தெலங்கானா பாஜக தலைவரும், மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமாா் 14 நாள் நீதிமன்ற காவலில் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களைப் பணியிட மாற்றம் செய்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கரீம்நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பண்டி சஞ்சய் குமாா் தலைமையில் போராட்டம் நடத்த பாஜகவினா் திட்டமிட்டனா். அதற்காக, பாஜக அலுவலகத்தில் ஏராளமான பாஜக தொண்டா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குவிந்தனா்.

அப்போது அங்கு வந்த போலீஸாா், கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு எதிராக ஒன்று கூடிய குற்றச்சாட்டின் பேரில், பண்டி சஞ்சய் குமாரை கைது செய்தனா்.

அப்போது, போலீஸாருக்கும் பாஜக தொண்டா்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பண்டி சஞ்சய் குமாா் மீது பேரிடா் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் குற்றத்துக்காகப் பிணையில் வெளிவர முடியாத (பிரிவு 333) பிரிவின் கீழும் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னா், உள்ளூா் நீதிமன்றத்தில் அவரை திங்கள்கிழமை பிற்பகலில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரை சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் நேற்று(ஜன.5) நிபந்தனை ஜாமினில் கரிம்நகர் சிறையிலிருந்து பண்டி சஞ்சய் குமாா் விடுதலை செய்யப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT