முகப்பு
இந்தியா

தேசிய நீர் மேலாண்மை விருது: தமிழகத்திற்கு 3-வது இடம்

தேசிய நீர் மேலாண்மை விருதுப்பட்டியலில் தமிழத்திற்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
தேசிய நீர் மேலாண்மை விருது: தமிழகத்திற்கு 3-வது இடம்
பகிர்:

தேசிய நீர் மேலாண்மை விருதுப்பட்டியலில் தமிழத்திற்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலை ஜல்சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில், உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் மாநிலம் 2-வது இடத்தையும், தமிழகம் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும் நீர் மேலாண்மையில் தெற்கு மண்டலத்தின் சிறந்த கிராமப் பஞ்சாயத்துப் பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புதூர் பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பள்ளியாக காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு சிறந்த நீர் மேலாண்மைப் பிரிவில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.