சிறையில் அதிரடி சோதனை; அச்சத்தில் செல்போனை விழுங்கிய கைதி
"டிடியு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது"
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM
கடந்த ஜனவரி 5ஆம் தேதி, தில்லி திகார் சிறையில் சிறை அலுவலர்கள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, விசாரணை கைதி ஒருவர், தன்னிடம் வைத்திருந்த செல்போனை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறுகையில், "ஜனவரி 5 ஆம் தேதி, சிறை எண்.1இல் உள்ள கைதி மீது சந்தேகம் ஏற்பட்டது. சோதனை செய்தவற்காக சென்றபோது, அவர் மொபைல் போனை விழுங்கிவிட்டார்.
இதையும் படிக்க | பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Advertisement
அவர் டிடியு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. ஆனால், மொபைல் இன்னும் வெளியே எடுக்கப்படவில்லை" என்றார்.