முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 1.41 லட்சம் பேருக்கு கரோனா

​இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.41 லட்சம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.41 லட்சம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,41,986 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 40,895 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 285 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தினசரி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் 9.28 சதவிகிதமாக உள்ளது.

இதுவரை மொத்தம் 3,44,12,740 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 4,72,169 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி: இதுவரை மொத்தம் 150.06 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.