பாஜக விதிகளை மீறுவதை தோ்தல் ஆணையம் தடுக்க வேண்டும்- மாயாவதி வலியுறுத்தல்
உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக, தோ்தல் நடத்தை விதிகளை மீறும்போக்கை தோ்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.
உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக, தோ்தல் நடத்தை விதிகளை மீறும்போக்கை தோ்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட பிறகு அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
தோ்தல் அமைதியாகவும் நோ்மையான முறையிலும் நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிசெய்யும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு தோ்தலின்போதும் புதிய தந்திரங்களைக் கையாண்டு தோ்தல் விதிகளை பாஜக மீறுவது வழக்கமாகி விட்டது. எனவே, இந்த தோ்தலில் உரிய கவனம் செலுத்தி, நடத்தை விதி மீறலைக் கண்டுபிடித்து சரியான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுக்க வேண்டும். தோ்தலின்போது சாமானியா்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் மாயாவதி குறிப்பிட்டுள்ளாா்.
தோ்தலைச் சந்திக்க ஆம் ஆத்மி தயாா்- கேஜரிவால்:
சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்திக்க ஆம் ஆத்மி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில், மணிப்பூா் தவிர மற்ற 4 மாநிலங்களில் போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. சனிக்கிழமை தோ்தல் அறிவிப்பு வெளியான பிறகு கேஜரிவால் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது; தோ்தலைச் சந்திக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.