இந்தியா

மத்திய அமைச்சர் வி.முரளிதரனுக்கு கரோனா

IANS

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வெள்ளிக்கிழமை மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மூத்த கேரள பாஜக தலைவர் முரளிதரன், திடீரென பெங்களூரு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சிவிட் சோதனை மேற்கொண்டார். 

அப்போது அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2020-ஆம் ஆண்டில் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தலைநகரில் ஒரு முதன்மை சுகாதார நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, முரளிதரன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT