முகப்பு
இந்தியா

மும்பை: விமானத்தை இழுத்துச் செல்லும் வாகனத்தில் தீ விபத்து

மும்பை விமான நிலையத்தில் விமானத்தை இழுத்துச் செல்லும் டிரேக்டரில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:05 AM
பகிர்:

மும்பை விமான நிலையத்தில் விமானத்தை இழுத்துச் செல்லும் டிரேக்டரில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து குஜராத்தின் ஜம்நகருக்கு செல்வதற்காக 85 பயணிகளுடன் இன்று காலை 10.45 மணியளவில் ஏர் இந்தியாவின் 647 விமானம் தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில், விமானத்தை ஓடுபாதைக்கு இழுத்துச் செல்லும் டிரேக்டர் விமானம் அருகே வந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து, உடனடியாக வந்த விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில், விமானத்திற்கு தீ பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து 20 நிமிடங்கள் தாமதமாக ஏர் இந்தியாவின் விமானம் ஜம்நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →