தில்லியில் ஜனவரி 5 முதல் 9 வரை கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 46 பேரில் 35 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்பது தில்லி சுகாதாரத் துறை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தில்லியில் ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 70 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தலா 17 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 5 நாள்களில் மொத்தம் உயிரிழந்த 46 பேரில் 34 பேருக்கு புற்றுநோய், இதய நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள். தரவுகளின்படி இணை நோய் உள்ள 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பிறகு நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | பிரபல இயக்குநருடன் இணையும் பிக்பாஸ் ஷிவானி: பிரபலங்கள் வாழ்த்து
கடந்த 5 நாள்களில் உயிரிழந்தவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைத் தாண்டியவர்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 பேர், 41 முதல் 60 வயதுடையவர்களில் 14 பேர், 21 முதல் 40 வயதுடையவர்களில் 5 பேர், 16 முதல் 20 வயதுடையவர்களில் ஒருவர், 15 வயதுக்கும் குறைவானவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் உயிரிழந்தவர்களில் 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அன்றைய தினமே உயிரிழந்துள்ளனர். 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். 14 பேர் மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.