தில்லி சிறையில் 66 கைதிகள், 48 ஊழியர்களுக்கு கரோனா
தில்லியில் உள்ள மூன்று சிறைகளில் 66 கைதிகள் மற்றும் 48 பணியாளர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
தில்லியில் உள்ள மூன்று சிறைகளில் 66 கைதிகள் மற்றும் 48 பணியாளர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தில்லி சிறையின் நிர்வாக இயக்குநர் சந்தீப் கோயல் கூறுகையில்,
கரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
சிறை அதிகாரிகள் வெளியிடப்பட்ட தகவலின்படி, திகார் சிறையில் 45 கைதிகளும், மண்டோலி சிறையில் 24 கைதிகளும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 48 ஊழியர்களில், 34 பேர் திகாரைச் சேர்ந்தவர்கள், 6 பேர் ரோகினி சிறையிலிருந்தும், 8 பேர் மண்டோலி சிறையிலும் உள்ளனர்.
திகார், மண்டோலி மற்றும் ரோகினி சிறை வளாகங்களில் வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க, கரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், திகாரில் ஆக்ஸிஜன் ஆலை விரைவில் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லேசான அறிகுறிகள் இருக்கும் கைதிகளுக்காகத் தனிமைப்படுத்தும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திகார் சிறையில் 120 படுக்கைகள் மற்றும் மண்டோலியில் 45 படுக்கை வசதிகள் கொண்ட சுகாதார மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் ஊழியர்களைக் கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணியாளர்கள் மற்றும் கைதிகளிடையே சமூக இடைவெளி முடிந்தவரைப் பின்பற்றப்படுகிறது.