கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் தனியார் அலுவலகங்கள், உணவகங்களை மூட உத்தரவு

தில்லியில் உணவகங்கள், தனியார் அலுவலகங்களை மூட வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

புது தில்லி: தில்லியில் உணவகங்கள், தனியார் அலுவலகங்களை மூட வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலால், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தில்லியில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள்கள் ஊரடங்கு, கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளில் தெரிவித்திருப்பது:

ஒமைக்ரான் பரவலால் தில்லியில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 23 சதவீதத்தை கடந்துள்ளது. இதனால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க பேரிடர் மேலாண்மை முடிவெடுத்துள்ளது.

1. அத்தியாவசிய பணி தவிர பிற தனியார் அலுவலகங்கள் அனைத்தும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2. அனைத்து உணவகங்கள், பார்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும், வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

3. அரசு ஊழியர்கள், அத்தியாவசிய தனியார் ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

4. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

5. மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் மருத்துவ ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.

6. திருமணங்களுக்கு செல்வோர் அழைப்பிதழை வைத்திருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT