இந்தியா

தெலங்கானா காளி கோயிலில் மனித தலை: உடலைத்தேடும் காவல் துறை

DIN

தெலங்கானாவில் உள்ள காளி கோயிலில் அடையாளம் தெரியாத நபரின் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உடலைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள காளி கோயிலில் காளி சிலை அருகே மனித தலை ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட பக்தர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

சின்டபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்டு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய துணை காவல் கண்காணிப்பாளர் தேவரகொண்டா, உயிரிழந்த நபர் 30 வயதுடயவர் என்பது தெரியவந்துள்ளது. வேறு இடத்தில் மர்ம நபர்கள் கொலை செய்து, தலையை காளி கோயிலில் வைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்காக 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மோப்ப நாய் கொண்டு உடலைத் தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

ஹைதராபாத்  - நாகர்ஜுன சாகர் நெடுஞ்சாலை அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், குற்றவாளிகள் வாகனத்தில் தலையை கொண்டுவந்திருக்கலாம். இதனால் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT