இந்தியா

நாட்டில் 15-18 வயதுடைய 2 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி

ANI


புது தில்லி: நாட்டில் 15 - 18 வயதுடைய இரண்டு கோடிப் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தற்போது, நாட்டின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றியடையச் செய்ய இளைஞர்கள் இதில் சேர்ந்துகொண்டுள்ளனர். இதுவரை 15 - 18 வயதுடைய சிறார்கள் 2 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் காணொலி காட்சி மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

ஜனவரி 3ஆம் தேதி முதல் இதுவரை நாட்டில் 2,82,74,847 தவணை கரோனா தடுப்பூசிகள் 15 - 18 வயதுடைய சிறாருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT