இந்தியா

கவலைக்குரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்: மத்திய சுகாதாரத்துறை

DIN

கரோனா பரவல் அதிகரித்து வரும் கவலைக்குரிய மாநிலங்களாக தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்டவை இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் கரோனா வகையால் நாடு முழுவதும் நோய்த் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இன்று ஒரே நாளில் இந்தியாவில் 1.94 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் லவ் அகர்வால் பேசியதாவது:

இந்தியாவில் தொடர்ச்சியாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாட்டில் 9,55,319 பேர் கரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 159 நாடுகளில் கரோனா அதிகரித்துள்ளது. ஐரோப்பாவின் 8 நாடுகளில் கடந்த இரண்டு வாரத்தில் இரு மடங்கு அதிகமான பரவல் ஏற்பட்டுள்ளது.

கவலைக்குரிய மாநிலங்களாக மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தில்லி, தமிழகம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், கேரளம் மற்றும் குஜராத் உள்ளன.

உலகம் முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 115 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 4,868 பேரில் ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளனர்.

நோய்த் தொற்றின் உறுதியாகும் விகிதமானது மகாராஷ்டிரத்தில் 22.39%, மேற்கு வங்கத்தில் 32.18%, தில்லியில் 23.1% மற்றும் உ.பி.யில் 4.47% ஆக உள்ளன.

தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், கனடா, டென்மார்க் நாடுகளின் தரவுகள்படி டெல்டாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் ஒமைக்ரானால் அனுமதிக்கப்படுவது குறைவாகத் தான் இருக்கும்.

பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு குணமடைந்தோர் வீடுகளுக்கு திரும்பும் கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் 93 சதவீதத்தை அடைந்தவுடன் மூன்று நாள்களுக்கு பிறகு வீட்டிற்கு செல்லலாம். லேசான அறிகுறிகளுடன் சிசிச்சை பெறுவோர் தொற்று உறுதி செய்யப்பட்டு 7வது நாள் வீடு திரும்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT